ADDED : மார் 21, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி,: காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 6 கிலோ கட்டியை மருத்துவர்கள் அகற்றினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கற்காத்தகுடியை சேர்ந்தவர் ராமநாதன் மனைவி ஆனந்தவள்ளி 37. இவருக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பல மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் வலி குறையவில்லை.
இந்நிலையில் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் கட்டி இருப்பது தெரிய வந்தது.
தலைமை மருத்துவர் அருள் தாஸ், ஆனந்தகுமார், பால அபிராமி, கீர்த்திகா, கவுரி, விக்னேஷ், ராஜஸ்ரீ மற்றும் தலைமை செவிலியர் கவுரி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் ஆனந்தவள்ளிக்கு அறுவை சிகிச்சை செய்து, வயிற்றில் இருந்த 6 கிலோ எடையிலான கட்டியை அகற்றினர்.