/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பூமாயி அம்மனுக்கு மஞ்சள் பூசும் விழா
/
பூமாயி அம்மனுக்கு மஞ்சள் பூசும் விழா
ADDED : ஆக 02, 2025 12:40 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் மூன்றாம் ஆடி வெள்ளியை முன்னிட்டு பெண்கள் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு அபிஷேகம் நடத்தினர்.
இக்கோயிலில் அம்மனை சாந்தப்படுத்தும் விதமாக மஞ்சள் அரைத்து மூலவருக்கு சாற்றும் விழா ஆடியில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 3வது வெள்ளிக்கிழமையன்று இவ்விழா நடைபெறுவது வழக்கம். நேற்று காலை 8:00 மணிக்கு திருப்புத்துார்,தம்பிபட்டி, தென்மாப்பட்டு,புதுப்பட்டி பகுதி பெண்கள் கோயில் வளாகத்தில் அம்மியில் பச்சை மஞ்சள் அரைக்க துவங்கினர். காலை 11:00 மணிக்கு அரைத்த மஞ்சளை மூலவர் பூமாயிஅம்மன் உள்ளிட்ட சப்தமாதர்களுக்கு சாற்றப்பட்டது.
பின்னர் அரைத்த மஞ்சளால் அபிஷேகம் நடந்தது. அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.