/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் டூவீலரில் கஞ்சா கடத்திய இருவர் கைது
/
தேவகோட்டையில் டூவீலரில் கஞ்சா கடத்திய இருவர் கைது
ADDED : ஆக 07, 2025 11:49 PM
தேவகோட்டை; தேவகோட்டை கருதாவூரணி அருகே இன்ஸ்பெக்டர் பெரியார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டனர்.
இரண்டு வாலிபர்கள் தனித்தனியே இரண்டு டூவீலரில் வந்தனர். வாகனத்தை ஆய்வு செய்ததில் பெட்ரோல் டேங்க் பையில் இரண்டு கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
போலீஸ் விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் யுவராஜ்.27., என்றும் தற்போது தேவகோட்டை அருகில் உள்ள தளக்காவயல் கிராமத்தில் மனைவி வீட்டில் இருப்பதும், வெளியூரிலிருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து தேவகோட்டையில் பீர்முகம்மது மகன் முகமது ஆசிப். 26 ., பிடம் கொடுத்து விற்பதும் தெரிய வந்தது.
யுவராஜ் கஞ்சாவை முகம்மது ஆசிப்பிடம் கொடுக்க நேற்று வந்தது விசாரணை யில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து யுவராஜ், முகம்மது ஆசிப் இருவரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவையும், இரண்டு டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர்.

