/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சரக்கு வேன் விபத்து இருவர் காயம்
/
சரக்கு வேன் விபத்து இருவர் காயம்
ADDED : ஏப் 14, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வேன் கவிழ்ந்ததில் இருவர் காயமுற்றனர்.
சிதம்பரத்தில் இருந்து திருச்சி வழியாக மதுரை மாவட்டம் கருங்காலக்குடிக்கு சரக்கு வேனில் பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு டிரைவர் முத்துராஜ், உதவியாளர் கோவிந்தகுமார் இருவரும் வந்தனர். புழுதிபட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே வந்தபோது டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த வேன் நடுரோட்டில் கவிழ்ந்ததில் இருவரும் காயமுற்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

