/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயிலில் கிடந்த இரண்டு கிலோ கஞ்சா
/
ரயிலில் கிடந்த இரண்டு கிலோ கஞ்சா
ADDED : அக் 28, 2025 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: ரயிலில் கேட்பாரற்று கிடந்த 2.150 கிலோ கஞ்சாவை காரைக்குடி போலீசார் கைப்பற்றினர்.
காரைக்குடி வழியாக செல்லும் ரயில்களில், தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்திச் செல்வதாக போலீசாருக்கு புகார் வந்தது.
காரைக்குடிக்கு வந்த புதுச்சேரி - கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே இருப்பு பாதை எஸ்.ஐ., சவுதாமா, எஸ்.எஸ்.ஐ., செல்வம் ராஜேஸ்வரி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
முன்பதிவு இல்லா பெட்டியில் வெள்ளை நிற சாக்கு ஒன்று கிடந்தது. சந்தேகத்தின் பெயரில் அதனை ஆய்வு செய்தபோது அதில் 2.150 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
கஞ்சாவை கைபற்றிய போலீசார், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

