/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லலில் ரேஷன் அரிசி பறிமுதல் மதுரையை சேர்ந்த இருவர் கைது
/
கல்லலில் ரேஷன் அரிசி பறிமுதல் மதுரையை சேர்ந்த இருவர் கைது
கல்லலில் ரேஷன் அரிசி பறிமுதல் மதுரையை சேர்ந்த இருவர் கைது
கல்லலில் ரேஷன் அரிசி பறிமுதல் மதுரையை சேர்ந்த இருவர் கைது
ADDED : டிச 11, 2024 02:47 AM

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் கல்லலில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்து மதுரையை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.
குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்.ஐ., திபாகர் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கல்லல் தெப்பக்குளம் பஸ் ஸ்டாண்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். அதில் 38 மூடைகளில் தலா 30 கிலோ வீதம் 1140 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வாகனத்தில் இருந்த அதன் உரிமையாளர் மதுரை மாவட்டம் கீழ் மதுரை சவுந்தரராஜன் மகன் சின்னதுரை 32, டிரைவர் மதுரை குமரன் தெரு ராஜூ மகன் ஆல்பர்ட் 23, ஆகியோரை கைது செய்து ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் மதுரையில் உள்ள சிறிய ஓட்டல்களில் விற்பனை செய்வதற்கு இளையான்குடி பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை பொது மக்களிடம் சேகரித்து சென்றது தெரிய வந்தது.