ADDED : நவ 21, 2025 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: முத்தனேந்தலில் இருந்து கட்டிக்குளம் கிராமத்திற்கு தீயணைப்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நேரு 67, என்பவர் டூவீலரில் சென்றார்.
எதிரே பெரும்பச் சேரியில் இருந்து முத்தனேந்தல் கிராமத்திற்கு சுள்ளங்குடி ஊராட்சி செயலாளர் மகேந்திரன் 54, என்பவரும் டூவீலரில் வந்தபோது எதிர்பாராத விதமாக 2 டூவீலர்களும் மோதி கொண்டதில் நேரு பலியானார்.
மகேந்திரன் தலையில் காயமடைந்து சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

