ADDED : ஆக 30, 2025 04:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஏ. புலன்வாசலைச் சேர்ந்தவர் நாகரத்தினம். 52. ,   பரமக்குடி அருகே அகரத்தை சேர்ந்த முத்துக்குமார் மகன் பிரவீன். 24.,  இருவரும் நேற்று மதியம் மூன்று மணியளவில்  ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒருவர் பின் ஒருவராக வேகமாக சென்றுள்ளனர்.
கிளியூர் விலக்கு அருகே செல்லும் போது பிரவீன் சென்ற டூவீலர் முன்னால் சென்ற நாகரத்தினம் டூவீலரில் மோதியது . இதில் நாகரத்தினம் சம்பவ இடத்திலேயே பலியானார். பிரவீனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது

