ADDED : பிப் 17, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனி மகன் ராஜேந்திரன். 48., இவர் மகன் ஹரீஷ் 15., உடன் டூவீலரில் தேவகோட்டையிலிருந்து காளையார்கோவிலுக்கு சென்றுள்ளார்.
பாவனக்கோட்டை சந்திப்பு அருகே செல்லும் போது எதிரே வந்த தேவகோட்டை பழைய சருகணி ரோட்டைச் சேர்ந்த ராமு மகன் அஜீத் குமார் 28, வந்த டூவீலர் நேருக்கு நேர் மோதியது.
இதில் தந்தை, மகன், எதிரே வந்தவர் உட்பட மூவரும் காயமடைந்தனர். இதில் ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.