/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டோரத்தில் முட்செடிகள் தடுமாறும் டூவீலர்கள்
/
ரோட்டோரத்தில் முட்செடிகள் தடுமாறும் டூவீலர்கள்
ADDED : செப் 19, 2025 02:01 AM

திருப்புத்துார்: திருப்புத்துாரிலிருந்து சிங்கம்புணரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள முட்செடிகளை அகற்ற வாகன ஓட்டுனர்கள் கோரியுள்ளனர்.
திருப்புத்துாரிலிருந்து சிங்கம்புணரி வழியாக கொட்டாம்பட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த ரோட்டோரத்தில் பல இடங்களில் இருபுறமும் முட்புதர்கள் வளர்ந்துள்ளன. பராமரிப்பின்றி முட்செடிகள் டூ வீலர் செல்லும் ரோட்டை மறைக்கிறது. இதனால் ரோட்டோரங்களில் செல்லும் டூ வீலர் ஓட்டுனர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் செல்லும் போது முட்செடிகள் முகத்தில் பட்டு விபத்து ஏற்படுகிறது.
பெரிய வாகனங்கள் ஒன்றையொன்று கடக்கும் போது டூ வீலர்களில் வருபவர்கள் ரோட்டோரத்தில் செல்லும் போது இந்த முட்செடிக்குள் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். மழைகாலம் துவங்க உள்ள நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் ரோட்டோர முட்புதர்கள்,செடி,கொடிகளை அகற்றி பராமரிக்க வாகன ஓட்டுநர்கள் கோரியுள்ளனர்.