நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர்.
தென் சிங்கம்புணரி வி.ஏ.ஓ., பாண்டிச்செல்வம் நேற்று ஆய்வுக்குச் சென்றபோது, வடக்கு வளவு செட்டியார் தெருவில் ஒரு வீட்டின் அருகே 3 மூடைகளில் 200 கிலோ ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது. அதை கைப்பற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்தார்.