ADDED : அக் 26, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழடி: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கீழடி அருங்காட்சியகத்திற்கு வரும் 30ம் தேதி விடுமுறை அளித்து கலெக்டர் ஆஷாஅஜித் உத்தரவிட்டுள்ளார்.
கீழடி அருங்காட்சியகத்திற்கு செவ்வாய்கிழமை விடுமுறை தினமாகும், இந்த மாதம் 30ம் தேதி கமுதியில் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட் உள்ளதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேவர் ஜெயந்திக்கு அனைத்து கட்சியினரும் திருப்புவனம் வழித்தடத்தை தான் பயன்படுத்துவர்.
எனவே அக்டோபர் 30ம் தேதி விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.