/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் மாயமான வரத்துக் கால்வாய் வீடுகளுக்குள் புகுந்த பாதாள சாக்கடை
/
காரைக்குடியில் மாயமான வரத்துக் கால்வாய் வீடுகளுக்குள் புகுந்த பாதாள சாக்கடை
காரைக்குடியில் மாயமான வரத்துக் கால்வாய் வீடுகளுக்குள் புகுந்த பாதாள சாக்கடை
காரைக்குடியில் மாயமான வரத்துக் கால்வாய் வீடுகளுக்குள் புகுந்த பாதாள சாக்கடை
ADDED : டிச 15, 2024 07:57 AM

காரைக்குடி : காரைக்குடியில் வரத்து கால்வாய் மாயமானதாலும், பாதாள சாக்கடை நிறைந்து வெளியேறியதாலும் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சிரமப்பட்டனர்.
காரைக்குடி மாநகராட்சியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பாதாள சாக்கடை திட்டம் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுமையாக நடைபெறாமலும், சோதனை ஓட்டம் முறையாக நடைபெறாமலும் திட்டம் ஒப்படைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
தற்போது நகரின் பல பகுதிகளிலும் பாதாளச் சாக்கடை குழாய்களில் இருந்து கழிவுநீர் வெளியேறி ரோட்டில் ஓடுகிறது. மேலும் வரத்து கால்வாய்கள் பலவும் ஆக்கிரமிப்பில் உள்ளதால் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதோடு வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
காரைக்குடி சூடாமணிபுரம் பாண்டி கோயில் வீதியில் தற்போது பெய்து வரும் கனமழையால், பாதாள சாக்கடையில் இருந்து கழிவு வெளியேறி வீடுகளுக்குள் புகுந்தது.
துர்நாற்றம் மற்றும் சுகாதாரக் கேடு நிலவுவதோடு பொருட்கள் சேதமானதாக மக்கள் புகார் கூறுகின்றனர். கலெக்டர் ஆயுஸ் வெங்கட் தாசில்தார் ராஜா ஆணையாளர் சித்ரா பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
மக்கள் கூறுகையில்: காரைக்குடி நகரில் பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் நகரை மொத்தமாக வீணாக்கி விட்டனர். பாதாள சாக்கடை மழைகாலங்களில் நிறைந்து வெளியேறி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
செப்டிக் கழிவுகளும் விடப்படுவதால் துர்நாற்றம் மற்றும் நோய் தொற்று அபாயம் நிலவுகிறது. வரத்து கால்வாய்களும் மாயமானது. தண்ணீரை வெளியேற்ற பல லட்சம் மதிப்பில் போடப்பட்ட சாலைகள் தோண்டப்பட்டு வீணாகி விட்டது என்றனர்.