/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் சுகாதாரமில்லாத விடுதி : மாணவர்கள் அவதி மாணவர்கள் அவதி
/
சிவகங்கையில் சுகாதாரமில்லாத விடுதி : மாணவர்கள் அவதி மாணவர்கள் அவதி
சிவகங்கையில் சுகாதாரமில்லாத விடுதி : மாணவர்கள் அவதி மாணவர்கள் அவதி
சிவகங்கையில் சுகாதாரமில்லாத விடுதி : மாணவர்கள் அவதி மாணவர்கள் அவதி
ADDED : ஆக 26, 2025 03:43 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு சுகா தாரக்கேடு ஏற்படுத்தும் விதமாக பராமரிப்பின்றி இருப்பதாக புகார் எழுந்து உள்ளது.
சிவகங்கை மாவட்ட விளையாட்டு விடுதியில் 60 மாணவர்கள் வரை தங்கி, தடகளம், கபடி உள்ளிட்ட பயிற்சிகளை பெற்று வருகின்றனர். இம்மாணவர்களுக்கென அரசு ஒதுக்கும் நிதியில் முறையான, சத்தான உணவுகளை வழங்குவதில்லை.
அதே போன்று விடுதி மாணவர்களின் சுகா தாரம் காக்க விடுதி வளாகத்தில் உள்ள கை கழுவும் பேஷின், பாத்ரூம் சுகாதாரமற்ற முறையில் உள்ளது.
தொடர்ந்து அவற்றை பராமரிக்காமல் விட்டதால், கைகழுவும் தொட்டி உடைந்து கிடக்கிறது. அவற்றை சீரமைக்க கூட விளையாட்டு விடுதி நிர்வாகம் முன்வரவில்லை. மேலும், விடுதி வளாகம், கழிப்பிடம், கைகழுவும் இடங்கள் என அனைத்தும் சுத்தமின்றி, குப்பை குவிந்து கிடக்கிறது.
உணவு கழிவுகளை தொட்டியில் கொட்டி வைப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இது போன்று பல்வேறு குறைபாடு களுடன் விளையாட்டு விடுதி செயல்படுவதால், மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளா கின்றனர்.
தரமான உணவு கிடைக்காதது, விடுதி சுகாதாரமற்ற முறை யில் இருப்பது போன்ற காரணத்தால் விளையாட்டில் ஆர்வம் செலுத்த முடியாமல் சிரமம் அடைவதாக மாணவர்கள் தெரிவிக் கின்றனர்.
துர்நாற்றம் வீசும்விளையாட்டு விடுதி ஆம் ஆத்மி கட்சி மாவட்ட செயலாளர் பெரியார் ராமு கூறிய தாவது:
கடந்த சில மாதங் களுக்கு முன் துணை முதல்வர் உதயநிதி வந்து சாப்பிட்டு சென்ற விடுதி தான், இன்றைக்கு சுகாதார மற்ற முறையில், வாஷ் பேஷன் கோப்பை சேதமுற்று கிடக்கின்றன.
மேலும், விடுதி வளாகத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை அப் புறப்படுத்தாமல், குவித்தே வைத்துள்ளனர். உணவு கழிவும் தேங்கி மாணவர்களுக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.
விளையாட்டில் ஆர்வம் செலுத்தும் மாணவர் களுக்கு விடுதியில் நல்ல சுகாதாரமான சூழல், தரமான உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், சிவகங்கை விடுதியில் அந்த நிலை இல்லை. மாணவர்களும் புகார் தெரிவிக்க அஞ்சுகின்றனர், என்றார்.