/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொடக்க கூட்டுறவு கடன் சங்க செயலர்கள் பணியிட மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு போராட்டம் நடத்தவும் சங்கங்கள் திட்டம்
/
தொடக்க கூட்டுறவு கடன் சங்க செயலர்கள் பணியிட மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு போராட்டம் நடத்தவும் சங்கங்கள் திட்டம்
தொடக்க கூட்டுறவு கடன் சங்க செயலர்கள் பணியிட மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு போராட்டம் நடத்தவும் சங்கங்கள் திட்டம்
தொடக்க கூட்டுறவு கடன் சங்க செயலர்கள் பணியிட மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு போராட்டம் நடத்தவும் சங்கங்கள் திட்டம்
ADDED : மே 11, 2025 11:16 PM

சிவகங்கை; தொடக்க கூட்டுறவு கடன் சங்க செயலர்களை பணியிட மாற்றம் செய்வதை எதிர்த்து போராட உள்ளதாக சிவகங்கையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாநில பொது செயலாளர் பி.காமராஜ்பாண்டியன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 4,400 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள் மூலம் நகை, பயிர் கடன், மானிய உரம் வழங்குதல், டெபாசிட் பிடித்தம் செய்தல் போன்ற பணிகள் நடக்கின்றன.
சங்கங்கள் பெறும் முதலீடுகள் மூலம் கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் சங்கத்தை ஏ, பி மற்றும் சி என மூன்று வகைகளாக பிரித்துள்ளனர். மூதலீட்டிலிருந்து கிடைக்கும் லாபத்தில் இருந்து தான் சங்க செயலர், கேஷியர், ஊழியர்கள் சம்பளம் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கூட்டுறவு பதிவாளர் அனைத்து சங்க செயலர்களையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார். ஏ சங்க செயலர்களை அதே ஏ சங்கத்திற்கு தான் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
ஆனால் அதிக லாபம் ஈட்டித் தந்த ஏ சங்க செயலர்களை லாபமே இல்லாத சி வகை சங்கங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் தலைமையில் கமிட்டி அமைத்தும் விசாரித்தனர். அந்த கமிட்டி அரசுக்கு வழங்கியுள்ள அறிக்கை முடிவை வெளியிட வேண்டும்.
அக்கமிட்டி அறிக்கை வெளியான பின்னரே கூட்டுறவு கடன் சங்க செயலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
கூட்டுறவு கடன் சங்க லாபத்தை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் செலுத்தி அதன் மூலம் மாதந்தோறும் சங்க ஊழியர்களுக்கு சம்பளம் வரவு வைக்க வேண்டும். ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை வழங்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
நிர்வாக இயக்குனர் தலைமையிலான கமிட்டி அறிக்கையை வெளியிடாமல் தொடக்க கூட்டுறவு கடன் சங்க செயலர்களை பணியிட மாற்றம் செய்வதை கண்டித்து மாநில அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து ஈரோட்டில் நடக்கும் மாநில செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும் என்றார்.