/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திறக்கப்படாத பொதுக்கழிப்பறை: ரூ.34.28 லட்சம் நிதி வீண்
/
திறக்கப்படாத பொதுக்கழிப்பறை: ரூ.34.28 லட்சம் நிதி வீண்
திறக்கப்படாத பொதுக்கழிப்பறை: ரூ.34.28 லட்சம் நிதி வீண்
திறக்கப்படாத பொதுக்கழிப்பறை: ரூ.34.28 லட்சம் நிதி வீண்
ADDED : அக் 19, 2025 09:18 PM
சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே துாய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தில் பொதுக்கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே பஸ் பயணிகள், வாடகை வாகன ஓட்டுநர்கள் பயன்பெறும் வகையில் துாய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தில் ரூ.34.28 லட்சம் மதிப்பில் பொதுக்கழிப்பறை கட்டடம் கடந்த 2021- -22ம் ஆண்டு கட்டி திறந்தனர். சிவகங்கை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வந்தது. மின்வாரியத்தின் மூலம் முறையான மின் இணைப்பு பெறததால் திறக்கப்பட்டு சில தினங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது.
மின் இணைப்பு இல்லாததால் போர் வசதி இருந்தும் மோட்டார் பயன்படுத்தி கழிப்பறை டேங்கில் தண்ணீர் வசதி நிரப்பமுடியாமல் இருந்தது. தண்ணீர் வசதி இல்லாததால் இந்த கழிப்பறையை அவசரத்திற்கு கூட யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொது கழிப்பறை கட்டடத்திற்கு காலபோக்கில் நகராட்சி நிர்வாகம் பூட்டு போட்டது.