/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் நாய்க்கடிக்கு 5 பேர் காயம்: அவதியில் மக்கள்
/
இளையான்குடியில் நாய்க்கடிக்கு 5 பேர் காயம்: அவதியில் மக்கள்
இளையான்குடியில் நாய்க்கடிக்கு 5 பேர் காயம்: அவதியில் மக்கள்
இளையான்குடியில் நாய்க்கடிக்கு 5 பேர் காயம்: அவதியில் மக்கள்
ADDED : அக் 19, 2025 09:17 PM
இளையான்குடி: இளையான்குடியில் நேற்று ஒரே நாளில் சிறுவன் உட்பட 5 பேர்களை நாய்கள் கடித்து காய முற்றனர்.
இளையான்குடியில் பைபாஸ் ரோடு மற்றும் புதூர் செல்லும் ரோடு,கண்மாய்க்கரை, மெயின் பஜார், சிவகங்கை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் நாய்கள் சுற்றி திரிகின்றன.
இங்குள்ள இறைச்சி கடைகள், ஓட்டல்களில் கிடைக்கும் உணவிற்காக சுற்றி தெரியும் நாய்கள் அப்பகுதியில் செல்பவர்களை அடிக்கடி கடிப்பதினால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நேற்று மட்டுமே அரியாண்டிபுரம் கருப்பையா 55, இளையான்குடி அப்துல் ரஹீம் 55, ஸ்ரீகாந்த் 23, முகமத் அஸ்மின் 15, இண்டன்குளம் ஜெயராஜ் 59, ஆகிய 5 பேர்களை நாய்கள் கடித்து, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர். நகரில் நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.