ADDED : அக் 19, 2025 09:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை பாலர் பாதுகாப்பு விடுதியில் மாவட்ட சேவா சமாஜம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முத்துக்கண்ணு தலைமை வகித்தார். சைமன் ஜார்ஜ் முன்னிலை வகித்தார். லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் தங்கமணி வரவேற்றார். ரவி, பகீரத நாச்சியப்பன் வாழ்த்துரை வழங்கினர். கண்காணிப்பாளர் ஆண்டாள், கணேசன், கவிப்பிரியா பங்கேற்றனர். செயலாளர் கோட்டைக்குமார் நன்றி கூறினார்.