ADDED : அக் 21, 2025 03:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: சாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரேயுள்ள நெடுஞ்சாலையின் இருபுறமும் மரங்கள் சாய்ந்து பல ஆண்டுகளாகியும் அகற்றப்படாததால் விபத்து அபாயம் நிலவுகிறது.
புதுவயல் பேரூராட்சியில் உள்ள அறந்தாங்கி நெடுஞ்சாலையில் ஏராளமான மரங்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட புயலால் மரம் சாய்ந்து கிடக்கிறது.
குறிப்பாக சாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரே சாய்ந்து கிடக்கும் இரு மரங்களை அகற்றவில்லை. இந்த ரோட்டில் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது.