ADDED : அக் 21, 2025 03:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் வயல்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அச்சத்தில் உள்ளனர்.
இப்பகுதியில் பல மின்கம்பங்கள் சாய்வான நிலையில் உள்ளது. இதனால் அனைத்து மின்கம்பிகளும் தாழ்வாக செல்கின்றன. நெல் நடவு செய்த நிலங்களில் வேலை பார்க்கும் போது, மின்சாரம் தாக்கிவிடும் அச்சத்தில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த அச்சத்தில் விவசாய பணிகளுக்கு, தொழிலாளர்கள் வர அஞ்சுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.