/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுகாதாரமில்லாத பள்ளி வளாகங்கள் காய்ச்சல் பரவியும் நடவடிக்கை இல்லை
/
சுகாதாரமில்லாத பள்ளி வளாகங்கள் காய்ச்சல் பரவியும் நடவடிக்கை இல்லை
சுகாதாரமில்லாத பள்ளி வளாகங்கள் காய்ச்சல் பரவியும் நடவடிக்கை இல்லை
சுகாதாரமில்லாத பள்ளி வளாகங்கள் காய்ச்சல் பரவியும் நடவடிக்கை இல்லை
ADDED : நவ 20, 2024 06:38 AM
திருப்புவனம், : திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்கள் பல சுகாதாரமின்றி இருப்பதால் மாணவ, மாணவியர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்புவனம் வட்டாரத்தில் 63 தொடக்கப்பள்ளிகளும், 32 நடுநிலைப்பள்ளிகளும், 10 உயர்நிலைப்பள்ளிகளும், ஏழு மேல்நிலைப்பள்ளிகளும், ஆறு மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் உள்ளன.
இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வெகு வேகமாக காய்ச்சல் பரவி வருகிறது. பருவ நிலை மாற்றத்தால் பரவி வரும் காய்ச்சல் என்பதால் ஏழு நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் டாக்டரிடம் நேரில் சென்று சிகிச்சை பெற வேண்டும், சுய வைத்தியம் கூடாது என அறிவித்துள்ளனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பெரும்பாலும் சுகாதாரமற்றவையாக உள்ளன. பள்ளிகளைச் சுற்றிலும் சாக்கடை நீர் தேங்குவது.
சுகாதாரமற்ற கழிப்பறை உள்ளது போன்றவற்றாலும் பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்குவதாலும் கொசுக்கள், ஈக்கள் உற்பத்தியாகி வருகின்றன.மாணவ, மாணவியர்கள் காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளிகளில் துாய்மை பணியாளர்கள் யாரும் இருப்பதில்லை.
அந்தந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களே தூய்மை பணியில் ஈடுபடுகின்றனர். மாணவ, மாணவியர்களுக்கான கழிப்பறையை உரிய முறையில் பராமரிப்பதில்லை.
ஒருசில பள்ளிகளில் ஆசிரியர்களே சொந்தப்பணத்தை செலவு செய்து கழிப்பறைகளை தூய்மையாக பராமரித்து வருகின்றனர். பெரும்பாலான பள்ளிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்படுவதில்லை. சிவகங்கை மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் காய்ச்சலால் மாணவ, மாணவியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.