/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாதுகாப்பில்லாத மழைமானி; 'நட்டு௺' வைத்து பூட்டிய அதிகாரிகள்
/
பாதுகாப்பில்லாத மழைமானி; 'நட்டு௺' வைத்து பூட்டிய அதிகாரிகள்
பாதுகாப்பில்லாத மழைமானி; 'நட்டு௺' வைத்து பூட்டிய அதிகாரிகள்
பாதுகாப்பில்லாத மழைமானி; 'நட்டு௺' வைத்து பூட்டிய அதிகாரிகள்
ADDED : ஜன 30, 2025 09:49 PM

திருப்புவனம்; திருப்புவனத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன மழை மானி எந்த வித பாதுகாப்பும் இன்றி வெறும் இரும்பு நட்டு வைத்து பூட்டப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தாலுகா அளவில் மழை, வெயில், காற்று வீசும் அளவு உள்ளிட்டவைகளை அளவிட பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நவீன மழை மானி அமைக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் வட்டார வேளாண்துறை மற்றும் தாசில்தார் குடியிருப்பு இடையே நவீன மழை மானி அமைக்கப்பட்டுள்ளது. மழை மானியை சுற்றிலும் கால்நடைகள் செல்லா வண்ணம் இரும்பு வேலி அமைக்கப்பட்டு கதவும் போடப்பட்டுள்ளது.இதில் பூட்டு வைத்து பூட்டாமல் அதிகாரிகள் வெறும் இரும்பு நட்டு வைத்து பூட்டியுள்ளனர்.
ஏற்கனவே திருப்புவனம்அரசு மருத்துவமனையில் வெட்ட வெளியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த மழை மானியில் மண்ணை கொட்டி சேதப்படுத்தி விட்டனர். இதனால் நவீன மழை மானி அமைக்கப்பட்டது.
மழை மற்றும் வெயில் அளவு தானியங்கி முறையில் மாவட்டம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் உள்ள கணினியில் பதிவாகும் வகையில் அமைக்கப்பட்டது. பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மழை மானிக்கு 100 ரூபாய் செலவில் பூட்டு போட கூட அதிகாரிகளுக்கு மனமில்லையோ என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

