/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா: ஏப்., 2ல் கொடியேற்றம் ஏப்., 10ல் தேரோட்டம்

ADDED : மார் 20, 2025 05:56 AM
சிவகங்கை: காளையார்கோவில் அருகேயுள்ள உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ஏப்., 2 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட உருவாட்டி பெரிய நாயகி அம்மன் கோயிலில், 1434 ம் பசலிக்கான பங்குனி திருவிழா ஏப்., 2 ம் தேதி இரவு 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டியதும், பக்தர்கள் விரதத்தை துவக்குவார்கள். பங்குனி திருவிழாவை முன்னிட்டு தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருவார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்., 10 ம் தேதி அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியநாயகி அம்மன் எழுந்தருள்வார். அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். அன்று காலை 6:00 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க, நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். ஏப்., 11 ம் தேதி இரவு 7:00 மணிக்கு கோயிலில் அம்மன் பூப்பல்லக்கில் திருவீதி உலா வருவார்.
விழா ஏற்பாட்டை கோயில் கண்காணிப்பாளர் பாலசரவணன், ஸ்தானிகர் ஐயப்பன் குருக்கள் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.