/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பேரூராட்சிகளில் ரூ.3.98 கோடியில் ஊரணி துார் வாருதல், ரோடு பணி
/
பேரூராட்சிகளில் ரூ.3.98 கோடியில் ஊரணி துார் வாருதல், ரோடு பணி
பேரூராட்சிகளில் ரூ.3.98 கோடியில் ஊரணி துார் வாருதல், ரோடு பணி
பேரூராட்சிகளில் ரூ.3.98 கோடியில் ஊரணி துார் வாருதல், ரோடு பணி
ADDED : ஏப் 25, 2025 06:34 AM
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை, திருப்புத்துார் பேரூராட்சிகளில் ஊரணி துார்வாருதல், ரோடு, பள்ளி கட்டடம் சீரமைக்க ரூ.3.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பேரூராட்சிகள் உதவி இயக்குனரின் கீழ் 11 பேரூராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பேரூராட்சிகளில் அடிப்படை ரோடு, பள்ளி கட்டடம் சீரமைப்பு, ஊரணி துார்வாரி, நடைபாதை தளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆன்மிக சுற்றுலா தலமான நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் உள்ள ஒரு ஊரணியை துார்வாருதல், ஊரணி கரையில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், மின்விளக்கு, மக்கள் அமர சேர் வசதி மேற்கொள்ள ரூ.86 லட்சம் ஒதுக்கியுள்ளனர்.
அதே போன்று கோட்டையூர், பள்ளத்துார், சிங்கம்புணரி, திருப்புத்துார் ஆகிய 4 பேரூராட்சிகளில் 37 ரோடுகளை புதுப்பிக்க ரூ.2.98 கோடியும், நெற்குப்பை பேரூராட்சி என்.வடுகபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, புரந்தான்பட்டி தொடக்க பள்ளிகளில் இரண்டு கழிப்பறை கட்ட ரூ.12 லட்சம் ஒதுக்கீடு என, ஒட்டு மொத்தமாக பேரூராட்சிகளுக்கு அரசு ரூ.3.98 கோடியினை ஒதுக்கியுள்ளது.

