/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலையோர நிரந்தர பார்க்கிங் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
சாலையோர நிரந்தர பார்க்கிங் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சாலையோர நிரந்தர பார்க்கிங் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சாலையோர நிரந்தர பார்க்கிங் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 01, 2025 07:18 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பலரும் நிரந்தரமாக வாகனங்களை நிறுத்தியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
திருப்புவனம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருபுறமும் 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. கடை வீதியின் இருபுறமும் டூவீலர்கள், கார்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனை, கோர்ட் உள்ளிட்ட பகுதிகளில் பலரும் நிரந்தரமாக வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இதில் பெரும்பாலான வாகனங்கள் வெளியூர் நபர்களுக்கு சொந்தமானவையாகும், எந்த வித ஆவணங்களும் இல்லாததால் இயக்க முடியாமல் அப்படியே நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். இந்திராநகர் உள்ளிட்ட தெருக்களில் திரும்பும் இடத்தில் வாகனங்களை நிறுத்தியிருப்பதால் தெருக்களில் திரும்ப முடியாமல் பலரும் விபத்தில் சிக்குகின்றனர்.
இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வருவதே தெரிவதில்லை. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் போதை கும்பல் அமர்ந்து மது அருந்துவதுடன், தகராறு செய்து வருகின்றனர்.
எனவே சாலையோரம் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.