ADDED : ஆக 21, 2025 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: புதுவயல் பேரூராட்சியில் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டி கிடக்கிறது.
புது வயல் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள 9 வார்டில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.
மக்களின் பயன்பாட்டிற்கு, பயன்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக மூடி கிடக்கிறது. பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

