ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு எப்படி அனுமதி மறுக்க முடியும்: உயர்நீதிமன்றம் கேள்வி
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு எப்படி அனுமதி மறுக்க முடியும்: உயர்நீதிமன்றம் கேள்வி
ADDED : அக் 15, 2026 05:34 PM

சென்னை:தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டு அதன் மாநில செயலர் ஜெகதீசன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன்,' 'ஜம்மு - காஷ்மீர் போன்ற பயங்கரவாத அச்சுறுத்தல் மிகுந்த இடங்களில் கூட, ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது; அமைதி பூங்காவான தமிழகத்தில் மட்டும் அனுமதி கிடையாதா; எதற்காக இந்த விஷயத்திற்கு எல்லாம் நீதிமன்றத்தை நாட வைக்கிறீர்கள்' எனக் கேள்வி எழுப்பியதுடன் விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,
போலீஸ் தரப்பில், வட மாவட்டங்களில் அக்டோபர் 25ம் தேதியும், தென் மாவட்டங்களில் நவம்பர் 1ம் தேதியும் ஊர்வலம் நடத்த அனுமதிக்க முடிவு செய்துள்ளனர். வழிபாட்டு தலங்கள் உள்ளதால் 58 இடங்களில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு அனுமதி வழங்கவில்லை என விளக்கமளிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, மசூதிகள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு எப்படி அனுமதி மறுக்க முடியும்,'' எனக் கேள்வி எழுப்பினார்.
