ADDED : நவ 04, 2024 07:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை அருகே நகரம்பட்டியில் நடந்த வடமஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 5 பேர் காயமுற்றனர்.
இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கையில் இருந்து 16 காளைகளும் 144 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
ஒரு காளைக்கு 25 நிமிடம் வீதம் ஒதுக்கி, வடத்தில் கட்டிவிட்டனர். இக்காளையை அடக்க 9 பேர் களம் இறக்கப்பட்டனர். இதில், காளைகள் முட்டியதில் 5 பேர் காயமுற்றனர். வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர், வீரர்களுக்கு பரிசு வழங்கினர்.