/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்மாய்களுக்கு செல்லாத வைகை ஆற்று நீர்; விவசாயிகள் ஏமாற்றம்
/
கண்மாய்களுக்கு செல்லாத வைகை ஆற்று நீர்; விவசாயிகள் ஏமாற்றம்
கண்மாய்களுக்கு செல்லாத வைகை ஆற்று நீர்; விவசாயிகள் ஏமாற்றம்
கண்மாய்களுக்கு செல்லாத வைகை ஆற்று நீர்; விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : நவ 04, 2024 06:59 AM

தேனி மாவட்டம், மூலவைகையில் உற்பத்தியாகும் வைகை ஆறு, தேனி, ஆண்டிபட்டி வைகை அணையில் இருந்து மதுரை வழியாக சிவகங்கை மாவட்டத்தை கடந்து ராமநாதபுரம் ஆற்றாங்கரை என்ற இடத்தில் கடலில் கலக்கின்றன.
வைகை ஆற்று நீர் திறக்கப்படும் போது, பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து இடது பிரதான கால்வாய் மூலம் இளையான்குடி பகுதி கண்மாய்களுக்கு நீர் செல்லும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைக்கு வைகை ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இளையான்குடி பகுதி விவசாயத்திற்கு முல்லியரேந்தல் கால்வாய் வழியாக இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுக்கு முன் முல்லியரேந்தல் கால்வாயில் இருந்து இளையான்குடி கண்மாய்க்கு பிரியும் இடத்தில், பொதுப்பணி கட்டிய ஷட்டர்கள் கால்வாய்க்கு மேடாக இருப்பதால், கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லவில்லை.
இதனால், கண்மாய் பாசன வசதி பெறும் 600க்கும் மேற்பட்ட ஏக்கர் நில விவசாயிகள் பாதிக்கப்பட்டு, நிலங்கள் தரிசாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் அபுபக்கர் கூறியதாவது:
பொதுப் பணித்துறையினர் கட்டிய ஷட்டர்களால், இளையான்குடி கண்மாய்க்கு வைகை ஆற்று நீர் செல்ல முடியவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் இளையான்குடி, அதிகரை, அம்முக்குடி கண்மாய்களுக்கு வைகை ஆற்று நீர் செல்லும் வகையில், கால்வாய் ஷட்டரை தாழ்வாக மாற்றி அமைக்க வேண்டும், என்றார்.