/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் வைகாசி விசாக விழா
/
குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் வைகாசி விசாக விழா
குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் வைகாசி விசாக விழா
குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் வைகாசி விசாக விழா
ADDED : ஜூன் 02, 2025 10:38 PM
சிவகங்கை: குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில்ஜூன் 9ம் தேதி வைகாசி விசாக திருவிழா நடைபெறும்.
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ஜூன் 9ம் தேதி காலை 7:00 மணிக்கு சண்முகநாத பெருமான் வெட்டிவேர் திருக்கோலத்துடன் கொலு மண்டபம் எழுந்தருள்வார்.
அன்று காலை நாதஸ்வர இன்னிசை நடைபெறும். மாலை 6:00 மணிக்கு நடக்கும் பாராட்டு விழாவில்மாசிலாமணி ஓதுவார் இறைவணக்க பாடல் பாடுவார். பேராசிரியர் சேதுபதி வரவேற்புரை ஆற்றுகிறார். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமை வகிக்கிறார். அமைச்சர் பெரியகருப்பன் பாராட்டு உரை நிகழ்த்துகிறார்.
அன்றைய தினம் அரசு பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 10ம்வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பரிசு வழங்க உள்ளனர். அன்று இரவு 8:00 மணிக்கு தேவார திருமுறை இன்னிசை நடைபெறும். இரவு 10:00 மணிக்கு வெள்ளி ரதத்தில் சண்முகநாத பெருமான் திருவீதி உலா வருகிறார்.
விழா கமிட்டியினர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.