/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளையார்கோவில் சோமேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்
/
காளையார்கோவில் சோமேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்
காளையார்கோவில் சோமேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்
காளையார்கோவில் சோமேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்
ADDED : மே 31, 2025 11:33 PM

சிகவகங்கை: காளையார்கோவில் சோமேஸ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் உள்ள சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக பிரமோத்ஸவ விழா அனுக்கை, விக்னேஸ்வர பூஜைகளுடன் தொடங்கியது.
நேற்று காலை 10:35 முதல் 11:15 மணிக்குள் கோயில் சிவாச்சாரியார்கள் கொடிமரத்தில் கொடியேற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தனர். விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாளுடன் தினமும் காலை சுவாமி புறப்பாடும், இரவு பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடைபெறும். 9ஆம் நாளில் சுவாமி அம்மாளுடன் ரதத்திற்கு புறப்படுகின்றனர். அன்று காலை 10:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறும் ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.