/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குற்ற உணர்ச்சியே இல்லாத போலீசார்: வைகோ குற்றச்சாட்டு
/
குற்ற உணர்ச்சியே இல்லாத போலீசார்: வைகோ குற்றச்சாட்டு
குற்ற உணர்ச்சியே இல்லாத போலீசார்: வைகோ குற்றச்சாட்டு
குற்ற உணர்ச்சியே இல்லாத போலீசார்: வைகோ குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 08, 2025 10:20 PM
திருப்புவனம்; அஜித்குமாரை தாக்கி கொலை செய்த போலீசாருக்கு குற்ற உணர்ச்சியே இல்லை என ம.தி.மு., பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
திருப்புவனம் அருகே மடப்புரத்தில் நகை திருட்டு சம்பந்தமாக விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் இறந்தார். அவரது தாயார் மாலதிக்கு ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை ஆறுதல் கூறி ஒரு லட்ச ரூபாய் நிதியை வழங்கினார்.
பின் பேசுகையில் :
சாத்தான்குளம் சம்பவம் போல மடப்புரம் சம்பவம் நடந்துள்ளது. அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் குடும்பத்தினருக்கு தகவல் சொல்லவில்லை.
காவல் நிலையங்களில் சித்ரவதை என்பது தொடர்கதையாக உள்ளது. அஜித்குமாரை அடித்து கொலை செய்த போலீசாருக்கு குற்ற உணர்ச்சியே இல்லை. சி.பி.சி.ஐ.டி., அல்லது சி.பி.ஐ., யார் வேண்டுமானாலும் விசாரிப்பதில் தவறு இல்லை. முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சம்பந்தப்பட்ட ஐந்து காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார், என்றார்.