ADDED : அக் 06, 2025 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர் திருப்புத்தூர் அருட்பெருஞ்ஜோதி சத்திய தர்மசாலையில் வள்ளலாரின் 202-வது பிறந்தநாள் விழா நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன் மடத்தில் கொடியேற்றினார். ஜோதி ஏற்றி, அன்னதானம் நடந்தது. டாக்டர் முருகராஜ் விழாவை துவக்கி வைத்தார்.
மாவட்ட செயலாளர் நாகசுப்பிரமணியன் வரவேற்றார். முன்னாள் துணை தாசில்தார் சுப்பிரமணியன், முன்னாள் வி.ஏ.ஓ.,சேகர், முன்னாள் லயன்ஸ் தலைவர் திருப்பதி, முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ரங்கசாமி பங்கேற்றனர்.