/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேன் --- டூவீலர் மோதலில் இருவர் பலி
/
வேன் --- டூவீலர் மோதலில் இருவர் பலி
ADDED : பிப் 09, 2024 02:03 AM

கண்டவராயன்பட்டி:சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் ஊர்குளத்தான்பட்டியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் பழனியப்பன், 23. இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு ஊருக்கு வந்திருந்தார். உறவினரான திருப்புத்துார் தம்பிபட்டியைச் சேர்ந்த சங்கர் மகன் சக்தி, 16, என்பவருடன் நேற்று டூவீலரில் திருப்புத்துார் சென்றார்; இருவரும் ஹெல்மெட் அணியவில்லை.
நேற்று பகல் 3:30 மணிக்கு, மணமேல்பட்டி விலக்கு அருகில் சென்ற போது, எதிரே திருப்புத்துாரிலிருந்து வந்த அஞ்சலக வேன், டூவீலர் மீது மோதியது.
இதில், டூவீலரில் வந்த இருவரும் படுகாயம் அடைந்து, திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகினர்.
கண்டவராயன்பட்டி போலீசார் விசாரித்தனர்.

