/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காணாமல் போன வன்னிமகுந்தான் கால்வாய் விவசாயிகள் புகார்
/
காணாமல் போன வன்னிமகுந்தான் கால்வாய் விவசாயிகள் புகார்
காணாமல் போன வன்னிமகுந்தான் கால்வாய் விவசாயிகள் புகார்
காணாமல் போன வன்னிமகுந்தான் கால்வாய் விவசாயிகள் புகார்
ADDED : ஆக 28, 2025 11:44 PM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பாசன கால்வாயை காணவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட உப்பாறு அணைக்கட்டில் இருந்து அரசினம்பட்டி வழியாக பல்வேறு கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வன்னிமகுந்தான் கால்வாய் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் அணைக்கட்டில் தண்ணீர் திறக்கப்பட்டு இக்கால்வாய் வழியாக 10க்கும் மேற்பட்ட கிராம கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு விவசாயம் நடக்கும்.
சில ஆண்டுகளாக இக்கால்வாய் பல இடங்களில் மண்மூடி காணாமல் போகும் நிலையில் உள்ளது. குறிப்பாக பட்டகோவில்களம் சாலை, வேங்கைப்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கால்வாயில் குப்பை, மண் மூடி, புதர் மண்டி கால்வாய் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது. வழக்கமாக வரும் மழைநீர் கூட கால்வாயில் வருவதில்லை. இதனால் பல கண்மாய்கள் மழைக்காலங்களில் வறண்டு, கால்வாயை நம்பியிருந்த விவசாயிகள் விவசாயத்தை தொடர முடியாமல் தவிக்கின்றனர். இதற்கிடையில் வன்னிமகுந்தான் கால்வாயை காணவில்லை என்றும், கண்டுபிடித்து மீட்டெடுத்து சீரமைக்குமாறு விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளனர்.