ADDED : அக் 16, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி:சிவகங்கை மாவட்டம் எஸ்.புதுார் ஒன்றியம் பிரான்பட்டி வி.ஏ.ஒ., பாலசுப்பிரமணியன் 32. களத்துப்பட்டி பாண்டித்துரை என்பவரிடம் பட்டா மாறுதலுக்காக 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
பாண்டித்துரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., ஜான் பிரிட்டோ தலைமையிலான போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பாண்டித்துரையிடம் கொடுத்தனர். சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் பாலசுப்பிரமணியனிடம் பாண்டித்துரை ரூபாயை கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஏசுதாஸ், எஸ்.ஐ., கோகிலா பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.