/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தீயணைப்பு நிலையத்தில் ரூ.65 ஆயிரம் பறிமுதல்
/
தீயணைப்பு நிலையத்தில் ரூ.65 ஆயிரம் பறிமுதல்
ADDED : அக் 16, 2025 02:38 AM
காரைக்குடி: காரைக்குடியில் திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலை அருகே தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு கடைகள் அமைக்க தடையில்லா சான்று வழங்குவதில் லஞ்சம் பெறுவதாக மாவட்ட கண்காணிப்பு குழு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பு குழு தலைமையில், லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ஜான் பிரிட்டோ, எஸ்.ஐ., கண்ணன் உட்பட போலீசார் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வில், நிலையத்திற்குள் வெவ்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.65 ஆயிரத்தை கைப்பற்றினர். நிலைய அலுவலர் மற்றும்அலுவலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டும், தீபாவளி பண்டிகையையொட்டி, காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ரூ.1.24 லட்சம் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.