/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வி.ஏ.ஓ.,விற்கு 4 ஆண்டு சிறை
/
வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வி.ஏ.ஓ.,விற்கு 4 ஆண்டு சிறை
வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வி.ஏ.ஓ.,விற்கு 4 ஆண்டு சிறை
வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வி.ஏ.ஓ.,விற்கு 4 ஆண்டு சிறை
ADDED : ஏப் 09, 2025 03:06 AM
சிவகங்கை:சிவகங்கையில் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே செம்மாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிக்குமார். இவர் 2014 ஜூலை 7ல் தனது தாயார் நாகம்மாளுக்கு சொந்தமான வாராப்பூரில் உள்ள 3 ஏக்கர் இடத்தை மாற்றுவதற்கு வாரிசு சான்றிதழ் பெற வி.ஏ.ஓ., முருகேசனை அணுகினார். சான்றிதழ் வழங்க அவர் ரூ.1500 லஞ்சம் கேட்டுள்ளார். சிவகங்கை லஞ்ச ஒழிப்புதுறை பழனிக்குமார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
2014 ஜூலை 14ல் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை முருகேசனிடம், பழனிக்குமார் கொடுத்தார். மறைந்து இருந்த போலீசார் முருகேசனை கையும் களவுமாக பிடித்தனர்.
இந்த வழக்கு சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. முருகேசனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செந்தில்முரளி உத்தரவிட்டார்.