ADDED : ஆக 09, 2025 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு அபிஷேகம்,வரலட்சுமி நோன்பு காரணமாக 201 பெண்களுக்கு சுமங்கலி பூஜை நடந்தது.
அண்ணாநகர் ஜீவாநகர் கல்லாம்பிரம்பு காளியம்மன் கோயிலில் பவுர்ணமி, வரலட்சுமி நோன்பை முன்னிட்டு அபிஷேகங்கள் நடந்தன. அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.
வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோயில்களில் மட்டுமின்றி வீடுகளில் பெண்கள் கையில் காப்பு கட்டி சிறப்பு பூஜை செய்தனர்.
பவுர்ணமி, ஆடி வெள்ளியை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் அம்மனுக்கு பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர்.