ADDED : ஜூன் 30, 2026 09:05 PM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: திருப்புத்துாரில் வி.சி.க. மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் வக்கீல் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் பெரியசாமி பங்கேற்றார்.
உள்ளாட்சித் தேர்தலில் கட்சி பங்கினை தீவிரப்படுத்த மாவட்ட செயலாளர் தலைமையில் 25க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.மண்டல துணைச் செயலாளர் சங்கு உதயகுமார், மாவட்ட பொருளாளர் பாண்டிமுத்து, மாவட்ட துணைச் செயலாளர் மூர்த்தி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் விஜயா, மாநில துணைச் செயலாளர்கள் ஆறுமுகம்,போஸ், கனகு ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
