ADDED : ஏப் 09, 2025 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அரண்மனை வாசலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய அரசின் வக்ப் சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தது.
தெற்கு மாவட்ட செயலாளர் பாலையா, வடக்கு மாவட்ட செயலாளர் இளையகவுதமன் தலைமை வகித்தனர். மண்டல துணை செயலாளர் முத்துராஜ், மாநில துணைச் செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்புச் செயலாளர் எல்லாளன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட துணைச் செயலாளர் சுடர்மணி, மாவட்ட செய்தித்தொடர்பாளர் ஆதிவளவன், மாவட்ட அமைப்பாளர்கள் ரவி, சேட்டு, ஆதி, ஜான்சன், ராஜேந்திரன், ஜேம்ஸ்வளவன், கண்ணன், விஜயன், காளிதாஸ், ராமதாஸ், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.