ADDED : பிப் 15, 2024 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி வீரமுத்தி அம்மன் கோயில் மாசித் திருவிழா வழிபாடு துவங்கியது.
பிப். 13ம் தேதி இரவு கோயிலில் காப்பு கட்டப்பட்டு அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. பெண்களும் சிறுமிகளும் ஊர்வலமாக பூத்தட்டு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.
இன்று முதல் தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. பிப். 20ல் பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்தும், பிப். 21ம் தேதி பொங்கல் வைத்தும் வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்கின்றனர்.

