/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காய்கறி, பழ விதை தொகுப்பு வழங்கல்
/
காய்கறி, பழ விதை தொகுப்பு வழங்கல்
ADDED : ஜூலை 03, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, ஜூலை 3-ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் காய்கறி விதை, பழத்தொகுப்பு வழங்கப்படும் என சிவகங்கை தோட்டக்கலை துணை இயக்குனர் வடிவேல் தெரிவித்தார். அவர் கூறியதாவது,
நாளை (ஜூலை 4) ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் சிறு, குறு, இதர விவசாயிகளுக்கு காய்கறி, பழ விதை தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தில் விதை தொகுப்பு பெற விரும்பும் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம், என்றார். ///