/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மீன் சந்தையாக மாறிய காய்கறி மார்க்கெட்; சிங்கம்புணரியில் ரோட்டில் நடக்கும் சந்தை
/
மீன் சந்தையாக மாறிய காய்கறி மார்க்கெட்; சிங்கம்புணரியில் ரோட்டில் நடக்கும் சந்தை
மீன் சந்தையாக மாறிய காய்கறி மார்க்கெட்; சிங்கம்புணரியில் ரோட்டில் நடக்கும் சந்தை
மீன் சந்தையாக மாறிய காய்கறி மார்க்கெட்; சிங்கம்புணரியில் ரோட்டில் நடக்கும் சந்தை
ADDED : ஏப் 25, 2025 10:11 PM

இப்பேரூராட்சியில் சிறுவர் பூங்கா அருகே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 1999ல் தினசரி காய்கறி சந்தை வளாகம் கட்டப்பட்டது. இச்சந்தை 2015ல் விரிவுபடுத்தப்பட்டு கூடுதலாக சில மீன் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் ரோட்டில் திறக்கப்பட்ட உழவர் சந்தைக்கு விவசாயிகள் வராததால், இங்கிருந்த காய்கறி கடைகள் அனைத்தும் அங்கு மாற்றப்பட்டது. உழவர் சந்தையை அதிகாரிகள் தொடர்ந்து நடத்த முடியாததால் மூடுவிழா கண்டது.
தற்போது ஒட்டுமொத்த தினசரி காய்கறி சந்தை வளாகமும் மீன் மார்க்கெட்டாகவே மாறிவிட்டது. இங்கு 20க்கும் மேற்பட்ட மீன் கடைகள் இயங்கி வருகின்றன. மீன் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதால் நாடார் பேட்டை உள்ளிட்ட பகுதி மக்கள் மீன் மார்க்கெட்டை நகருக்கு வெளியே கொண்டு செல்ல தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் உழவர் சந்தை மூடப்பட்ட நிலையில் காய்கறி கடைகள் அனைத்தும் மேலூர் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் தினசரி காய்கறி சந்தை, மீன் மார்க்கெட், உழவர் சந்தை விஷயத்தில் தெளிவான முடிவெடுக்காததால் இந்த குழப்பம் நீடிக்கிறது. மேலும் மீன் மார்க்கெட்டிற்கு வரும் கூட்டத்தால் ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் காலை 10:00 மணி வரை இச்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் மீன் கழிவு, நாடார் பேட்டைக்குள் கழிவுநீர் கால்வாய் வழியாக செல்லும் போது துர்நாற்றம் வீசி அப்பகுதி மக்களுக்கு உடல்நலக் குறைவும் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே ஒட்டுமொத்த மீன் கடைகளையும் நகருக்கு வெளியே அமைத்துவிட்டு, தினசரி சந்தையை மீண்டும் தினசரி காய்கறி சந்தையாக பயன்படுத்த வேண்டும்.
ரோட்டில் போடப்படும் அனைத்து சிறு காய்கறி கடைகளையும் இச்சந்தைக்குள் அனுமதிக்கும்போது போக்குவரத்தும் குறையும் சுகாதாரமும் மேம்படும்.