/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில்வே கேட்டில் சிக்கிய வாகனம்; சென்னை ரயில் 40 நிமிடம் தாமதம்
/
ரயில்வே கேட்டில் சிக்கிய வாகனம்; சென்னை ரயில் 40 நிமிடம் தாமதம்
ரயில்வே கேட்டில் சிக்கிய வாகனம்; சென்னை ரயில் 40 நிமிடம் தாமதம்
ரயில்வே கேட்டில் சிக்கிய வாகனம்; சென்னை ரயில் 40 நிமிடம் தாமதம்
ADDED : டிச 23, 2024 12:25 AM
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பசலை ரயில்வே கேட்டில் சரக்கு வாகனம் சிக்கிக்கொண்டதால் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் 40 நிமிடங்கள் தாமதமாக சென்றது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16752) தினமும் சென்று வருகிறது. நேற்று மண்டபத்தில் இருந்து புறப்பட்ட ரயில் கீழப்பசலை ரயில்வே கேட் அருகே வந்த போது ஊழியர்கள் மூட முயன்றனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வாகனம் கேட்டில் சிக்கியது. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் கேட்டை சரி செய்த பிறகு 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே அந்த ரயில் வந்து கொண்டிருந்த போது ரயிலில் பயணித்த ஒருவர் அபாய செயினை பிடித்து இழுத்து விட்டு ஓடிவிட்டார்.
பின்னர் அதனையும் சரி செய்த பிறகு ரயில் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு 7:25 மணிக்கு பதில் 40 நிமிடம் தாமதமாக வந்து பின் சென்னை சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.