/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை வீர அழகர் கோயிலை மறைத்து நிறுத்தப்படும் வாகனங்கள்
/
மானாமதுரை வீர அழகர் கோயிலை மறைத்து நிறுத்தப்படும் வாகனங்கள்
மானாமதுரை வீர அழகர் கோயிலை மறைத்து நிறுத்தப்படும் வாகனங்கள்
மானாமதுரை வீர அழகர் கோயிலை மறைத்து நிறுத்தப்படும் வாகனங்கள்
ADDED : அக் 18, 2024 05:18 AM

மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலை மறைத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நிறுத்துவதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
மானாமதுரை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விபத்து,திருட்டு வழக்கு மற்றும் மணல் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை போலீஸ் ஸ்டேஷன் எதிர்புறம் உள்ள வீர அழகர் கோயில் சுற்றுச்சுவரை ஒட்டி நிறுத்தி வருகின்றனர். அப்பகுதியில் கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுவதால் பக்தர்கள் கோயிலை சுற்றி வர முடியாத நிலை இருப்பதாக தெரிவித்தனர்.
சித்திரை திருவிழாவின் போது இப்பகுதியில் மண்டகப்படி அமைக்கப்படுவதை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை போலீசார் கடந்த திருவிழா நேரத்தில் வேறு இடத்திற்கு மாற்றினர்.
தற்போது கடந்த 2 மாதங்களாக மீண்டும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நிறுத்தி வருவதால் அப்பகுதியில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது.