/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் ரோட்டில் வாகனங்கள் நிறுத்தம்: பொதுமக்கள் தவிப்பு: போலீசார் பாராமுகம்
/
திருப்புவனத்தில் ரோட்டில் வாகனங்கள் நிறுத்தம்: பொதுமக்கள் தவிப்பு: போலீசார் பாராமுகம்
திருப்புவனத்தில் ரோட்டில் வாகனங்கள் நிறுத்தம்: பொதுமக்கள் தவிப்பு: போலீசார் பாராமுகம்
திருப்புவனத்தில் ரோட்டில் வாகனங்கள் நிறுத்தம்: பொதுமக்கள் தவிப்பு: போலீசார் பாராமுகம்
ADDED : டிச 01, 2025 06:36 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் கனரக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனம் நகரைச் சுற்றிலும் 173 கிராமங்கள் உள்ளன. இக்கிராமமக்கள் பலரும் டூவீலர்களில் திருப்புவனம் வந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். திருப்புவனத்தில் ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி சென்று விடுகின்றனர். இதனால் தினசரி திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலை சுருங்கி எதிர் எதிரே வரும் வாகனங்கள் விலக கூட முடிவதில்லை.
சாலையோரம் பொதுமக்கள் நடக்க கூட பாதையில்லை. சாலையின் இருபுறமும் வரிசையாக டூவீலர்களை நிறுத்துவதுடன் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களையும் பகல் முழுவதும் நிறுத்தி விடுகின்றனர். இதுதவிர கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்களும் சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.
இதனால் ராமேஸ்வரம், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள் நகருக்குள் வராமல் பைபாஸ் ரோட்டிலேயே சென்று விடுகின்றன. திருப்புவனத்தில் போக்குவரத்து போலீசார் காலை மற்றும் மாலை என குறிப்பிட்ட சில நேரம் மட்டும் பணியாற்றி விட்டு செல்கின்றனர். இதனால் பகல் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடிவதில்லை.
திருப்புவனத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் சாலையோரம் பலரும் வாகனங்களை நிறுத்தியதால் பொதுமக்கள் விலக கூட இடமின்றி மழையில் நனைந்தபடியே சென்றனர். மாவட்ட நிர்வாகம் சாலையோரம் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவக்கை எடுக்க வேண்டும்.

