/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் விரிவடைந்து வரும் பள்ளம் : மாணவிகள் அச்சம்
/
திருப்புவனத்தில் விரிவடைந்து வரும் பள்ளம் : மாணவிகள் அச்சம்
திருப்புவனத்தில் விரிவடைந்து வரும் பள்ளம் : மாணவிகள் அச்சம்
திருப்புவனத்தில் விரிவடைந்து வரும் பள்ளம் : மாணவிகள் அச்சம்
ADDED : டிச 01, 2025 06:35 AM

திருப்புவனம்: திருப்புவனம் புதுார் மாதவன் நகரில் சாலையோர பள்ளம் நாளுக்கு நாள் பெரிதாகி வருவதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருப்புவனம் புதுாரில் இருந்து மாதவன் நகர், வன்னிகோட்டை, பிரமனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான தார்ச்சாலை உள்ளது. மாதவன் நகர் பகுதியில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியேற பேரூராட்சி சார்பில் குறுகிய வடிகால் அமைக்கப்பட்டது. கழிவு நீர் வெளியேறும் இடத்தில் கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் சுத்தம் செய்வதற்காக சாலையோரம் பேரூராட்சி ஊழியர்கள் பள்ளம் தோண்டி வைத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக இந்த பள்ளம் சரி செய்யப்படாததால் நாளுக்கு நாள் பள்ளத்தின் ஆழமும், அகலமும் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் மூன்று அடி அகலத்தில் இருந்த பள்ளம் தற்போது பத்து அடி அகலமாக மாறியதுடன் பள்ளத்தில் சாக்கடை நீர் நிரந்தரமாக தேங்கியுள்ளது.
பள்ளத்தை ஒட்டி அரசு மாணவியர்கள் விடுதியும் உள்ளது. பள்ளத்தில் உள்ள சாக்கடையில் இருந்து கொசுக்கள், ஈக்கள் உற்பத்தியாகி பகல், இரவில் கடிப்பதால் மாணவிகள் படிக்க, தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இப்பாதை வழியாக பிரமனூர், அச்சங்குளம், வில்லியரேந்தல், பனையனேந்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள் நடந்தும், பஸ், டூவீலர்களில் உள்ளிட்டவற்றில் சென்று வருகின்றனர்.
சாக்கடை கால்வாய் மேற்பகுதியில் பாலம் அல்லது சிமென்ட் குழாய் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து இரு ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டுமான பணிக்காக பள்ளத்தை மேலும் அதிகரித்தவர்கள் அப்படியே விட்டு விட்டனர். நெடுஞ்சாலைத்துறையினர் கழிவு நீர் வெளியேற பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

