/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விஜய் தமிழக வளர்ச்சிக்கு எதிராக பேசுகிறார்: கார்த்தி எம்.பி., பேட்டி

ADDED : ஜன 21, 2025 06:22 AM
காரைக்குடி: தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராக த.வெ.க., தலைவர் விஜய் பேசுவதாக கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது: மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனை அமைவதற்கு முதல்வரிடம் வலியுறுத்தப்படும். சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் சிந்தித்து பேச வேண்டும். கோமியம் குடிப்பது பழமையான மத நம்பிக்கையாக இருக்கலாம், விஞ்ஞானத்தில் நிரூபிக்கப்படாத அதை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறியது அவரது பதவிக்கு அழகல்ல. துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர் தீர்வு காணவில்லை என்றால் உச்ச நீதிமன்றம் தீர்வு காணும் என்ற நம்பிக்கை உள்ளது.
புதிய நவீன விமான நிலையம் தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. சென்னை விமான நிலையம் மிக மோசமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு ஒற்றுமையுடன் முடிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளன. இதனை வேண்டாம் என்று, கூறுவது அரசியல் தலைவருக்கு நல்லதல்ல.
த.வெ.க., கட்சி தலைவர் விஜய் தமிழக வளர்ச்சிக்கு எதிராக பேசுகிறார். பரந்துார் விமான நிலையம் குறித்து நிதி அமைச்சர் விரிவாக விளக்கிக் கூறியுள்ளார் என்றார்.