/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாவட்டத்தில் நிதியின்றி கிராம ஊராட்சிகள் திணறல் தெருவிளக்கு, குடிநீர் குழாய் பராமரிப்பில் சிக்கல்
/
மாவட்டத்தில் நிதியின்றி கிராம ஊராட்சிகள் திணறல் தெருவிளக்கு, குடிநீர் குழாய் பராமரிப்பில் சிக்கல்
மாவட்டத்தில் நிதியின்றி கிராம ஊராட்சிகள் திணறல் தெருவிளக்கு, குடிநீர் குழாய் பராமரிப்பில் சிக்கல்
மாவட்டத்தில் நிதியின்றி கிராம ஊராட்சிகள் திணறல் தெருவிளக்கு, குடிநீர் குழாய் பராமரிப்பில் சிக்கல்
ADDED : பிப் 14, 2025 07:20 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடின்றி, தெருவிளக்கு, குடிநீர் குழாய் பராமரித்தல் உள்ளிட்ட அடிப்படை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட அளவில் 12 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 445 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 1,800 க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிதியில் இருந்து தான், தெருவிளக்கு, குடிநீர் குழாய் பராமரிப்பு, குப்பை அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டிய சூழல் உள்ளது.
உள்ளாட்சி பிரதிநிதிகள் கால கட்டத்தில் மாநில நிதிக்குழு மானியம், வேலை உறுதி திட்ட நிதி என பல வகைகளில் ஊராட்சிகளுக்கு நிதி வந்தது. ஆனால், உள்ளாட்சி பிரதிநிதிகள் காலம் முடிந்த நிலையில், தற்போது மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு ஊராட்சிக்கு தலா ரூ.10 ஆயிரம் மட்டுமே ஒதுக்குகின்றனர்.
மாதம் ரூ.10,000 பிரயோஜனம் இல்லை
இந்த நிதியை வைத்து தெருவிளக்கு பராமரித்தல், ஊராட்சிகளில் இறப்பு நேரிடும் போது ஈமக்கிரியை செலவிடுதல், குடிநீர் குழாய் பராமரித்தல், ஊராட்சிகளில் சுகாதாரம் மேற்கொள்ள குப்பை அகற்றுதல், குடிநீர் தொட்டிகளை குளோரினேசன் செய்தல் உள்ளிட்ட அடிப்படை பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஊராட்சி செயலர்கள் வீடு, தொழில், பிளான் அப்ரூவல் மூலம் கிடைக்கும் வருவாயை மட்டுமே பெற்று அரசுக்கு செலுத்தி வருகின்றனர். அந்த நிதியையும் ஊராட்சிகள் செலவிட முடியாத நிலை உள்ளது.
இதனால், அரசு மாதந்தோறும் வழங்கும் ரூ.10,000 மட்டுமே வைத்து, மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகங்கள் திணறி வருகிறது. குறிப்பாக கோடை காலத்தில் குடிநீர் மூலம் காலரா, வயிற்று போக்கு உள்ளிட்ட நோய்கள் எளிதில் பரவும்.
கோடையில் நோய் அச்சம்
பொது குடிநீர் மேல்நிலை, தரைமட்ட தொட்டிகளை குளோரினேசன் செய்ய வேண்டிய கட்டாய சூழல் தற்போது உள்ளது. ஆனால், அரசு வழங்கும் ரூ.10 ஆயிரத்தை மட்டுமே வைத்து, இது போன்ற அத்தியாவசிய பணிகளை செய்ய முடியாமல் ஊராட்சிகள் திணறி வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் ஊராட்சி செலவின நிதிகளை முழுமையாக வழங்கி, கிராமங்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.